Enable Javscript for better performance
இலவச தையல் பயிற்சி பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    இலவச தையல் பயிற்சி பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 28th November 2016 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் இலவச தையல் பயிற்சி பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தூத்துக்குடி வெற்றி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பா. கதிரேச பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிரில் அமைந்துள்ள வெற்றி அறக்கட்டளை சார்பில் பல்வேறு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மத்திய ஜவுளித் துறையின் கீழ் தையல் பயிற்சியை பெண்களுக்காக இலவசமாக நடத்தி வருகிறோம்.
    இதற்கான முதல் பயிற்சி, கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில் தையல் கலை அடிப்படை நிலையில் இருந்து கற்று தரப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது கணினி, யோகா,  முதலுதவி, தீயணைப்பு, தன்னம்பிக்கை போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மேலும் தையல் பயிற்சிக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் கூடிய வழிகாட்டி புத்தகமும் வழங்கப்படுகிறது.
    பயிற்சியின் முடிவில் பெண்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பும், விருப்பப்பட்டால் சுயதொழில் செய்யவும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
     இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் 18 வயது முதல் 38 வயதுக்குள்பட்டவர்களாக இருத்தல் அவசியம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் கொண்டு வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல் அறிய 0461-2337227 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
     இதற்கிடையே, முதல்கட்டமாக பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு தலைமை ஆசிரியர்  ஆல்பர்ட் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குநர் பா.கதிரேச பாண்டியன்,  பயிற்சியாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai