Enable Javscript for better performance
சாத்தான்குளத்தில் தமாகா தெருமுனை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி 3ஆம் ஆண்டு தொடக்க விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
    கிழக்கு வட்டாரத் தலைவர் வழக்குரைஞர் எஸ். சேவியர்சுதாகர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பி. சேசுராஜ், நகரத் தலைவர் ஏ.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணித் தலைவர் பி.தங்கத்தாய்பிரபாகரன் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
     கூட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலர் வடுவூர் கரிகாலன் பேசினார். இதில் வட்டார இளைஞர் அணிச் செயலர் போபாஸ், நகரச் செயலர்  ஏ.எஸ். ஆவுடையப்பன், நகர பொதுச் செயலர் சங்கரநாராயணன், வார்டு செயலர் சுடலையாண்டி, உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர இளைஞர் அணித் தலைவர் எஸ்.சகாயஎமல்டன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai