Enable Javscript for better performance
நெருப்பில்லா சமையல்: தூத்துக்குடி கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    நெருப்பில்லா சமையல்: தூத்துக்குடி கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

    By DIN  |   Published on : 28th November 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பிலான பயிலரங்கம் நடைபெற்றது.
    கல்லூரியின் சுற்றுச்சூழல் கழகம் சார்பில் நடைபெற்ற பயிலரங்கிற்கு, கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலின் ஷர்மிளா தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார்.
    உணவு தயாரிப்பாளர் லோகநாதன், யோகா ஆசிரியர் தேவி ஆகியோர் கலந்து கொண்டு சத்தான உணவின் முக்கியத்துவவம் குறித்தும், பீட்ருட் ஊறுகாய், காய்கனி பசுங்கலவை, இனிப்பு அவல், கார அவல் போன்றவை தயாரிக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.
    தொடர்ந்து, நெருப்பில்லா சமையல் முறையில் சத்தான உணவு தயாரிக்கும் போட்டி மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், மாணவி பூர்ணிமா சங்கரி முதல் பரிசையும், முத்துலட்சுமி இரண்டாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு யோகா ஆசிரியர் தேவி பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இரா.தங்கசெல்வம் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai