Enable Javscript for better performance
பன்னம்பாறை பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் ஆகியவை இணைந்து பள்ளியின் குறுவள மையத்தில் நடத்திய இக்கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் லீலாவதி தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோசஸ் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி மிக்கேல்ராஜ் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மலையழகு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். கண்காட்சியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 100மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு படைப்புகளை சமர்ப்பித்தனர்.
    இதில், சாத்தான்குளம் இப்ராகிம் தொடக்கப்பள்ளி முதல் பரிசும், எலியட்டக்ஸ் போர்டு தொடக்கப்பள்ளி 2ஆம் பரிசும், ஆர்.சி. பெண்கள் தொடக்கப்பள்ளி 3ஆம் பரிசும் பெற்றனர். சிறப்பு பரிசினை பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai