Enable Javscript for better performance
பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் ஒன்றியம் காந்திநகர், வள்ளியம்மாள்புரம் குறுவள மையம் மற்றும் மாவடிப்பண்ணையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    சாத்தான்குளம் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள குறுவள மையத்தில் தேசிய வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    ஆசிரியர் விக்டர் ஜான்சன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி லில்லி வரவேற்றார். மாணவர், மாணவிகள் அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.  இதில் விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர் தீபக்ராம் முதல் பரிசு பெற்றார். இதில், ஆசிரியர்கள் சாந்தகுமார், சகாயராஜ், சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    வள்ளியம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள குறுவள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் ஆகியன சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    இதில், சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மைய ஒருங்கிணைப்பாளர் ரெக்ஸ் அமிர்தரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவளமைய அளவிலான பள்ளிமாணவர்கள் பங்குபெற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    கண்காட்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே.ஜோதிமணி தொடங்கிவைத்தார். முதல் பரிசை புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், 2ஆம் பரிசை குரங்கணி இந்து தொடக்கப் பள்ளியும், 3ஆம் பரிசை மாவடிப்பண்ணை சாமி அய்யா தொடக்கப் பள்ளியும், மணத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் பெற்றன. ஒட்டுமொத்த சிறந்த பள்ளிக்கான பரிசை புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பெற்றது.
    முதலிடம் பெற்ற புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகளை தலைமையாசிரியர் சுரேஷ் நியூமன், தமிழாசிரியை எஸ்.பெல்சியா உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai