Enable Javscript for better performance
போக்குவரத்துக் கழக பணிமனை முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியையடுத்த வள்ளிநாயகிபுரத்திற்கு அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலையூரிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளிநாயகிபுரத்திற்கு சிற்றுந்து இயங்கி வந்ததாம். அந்த சிற்றுந்து கடந்த சில மாதங்களாகவே இயங்கவில்லையாம். இதையடுத்து தங்கள் பகுதியில் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி அரசுப் பணிமனை போக்குவரத்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தார்களாம்.
    இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் முருகப்பெருமாள் தலைமையில், அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவினரிடம் பணிமனை கிளை மேலாளர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai