Enable Javscript for better performance
மகிழ்வோர் மன்றக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி மகிழ்வோர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
     கமலா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவர் ராஜ்குமார், தொழிலதிபர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மன்ற இணைச் செயலர் துரைராஜ் அறிக்கை வாசித்தார். அருள்பிரகாஷ் சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது பெற்ற காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவசூர்யாவுக்கு பரிசு வழங்கி, வாழ்வியல் நகைச்சுவை என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில், நகைச்சுவை துணுக்குகள் வழங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    மாவட்ட உரிமையியல் நீதிபதி வீரணன், மகிழ்வோர் மன்ற பாதுகாவலர் காளிதாஸ், செயலர் ஜான்கணேஷ், இணைச் செயலர் வெள்ளைச்சாமி, ரோட்டரி சங்கத் தலைவர் லட்சுமணப்பெருமாள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கம், பள்ளி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி, சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் ராதா, வடிவேல், யாகப்பன், ஓய்வு பெற்ற நாடார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லூயிஸ் இன்பராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் மோகன்ராஜ் வரவேற்றார். தலைவர் சேர்மத்துரை நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai