Enable Javscript for better performance
ஆசிரியர்களுக்கு ஒன்றியங்களுக்குள் தேர்தல் பணி ஒதுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்களுக்கு ஒன்றியங்களுக்குள் தேர்தல் பணி ஒதுக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்துக்குள்ளேயே பணி ஒதுக்கீடு செய்யவேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். செயலர் செல்வராஜ், பொருளாளர் சம்பத் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், "மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கைவிடக்கோரி சென்னையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது; தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து வசதி கருதியும் ஆசிரியர்கள் பணிபுரியும் ஒன்றியத்துக்குள்ளேயே தேர்தல் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வாக்களிக்க தேவையான படிவங்களையும், வாக்குச் சீட்டுகளையும் முன்கூட்டியே வழங்கவேண்டும் என்றும், ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி வாக்குப்பதிவு முடிந்த பின் 3 மணி நேரத்துக்குள்ளாக வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai