Enable Javscript for better performance
ஆறுமுகனேரி தசரா குழுவில் அன்னதானம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி சிவன்கோவில் தெரு ஸ்ரீ சிவமயம் தசரா குழு சார்பில் 6ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
    திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அன்னதானத்தை ஏ.செந்தில் சுவாமிகள் தொடங்கிவைத்தார். நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பி.முருகன், பி.லட்சுமணன், நகர இந்து முன்னணி தலைவர் பி.சேர்மத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில் பி.சேகர், பி.ரமேஷ், சி.ராஜா, கே.மூர்த்தி, பி.மாரியப்பன், எஸ்.பரமசிவன், கே.கண்ணன், எம்.சக்திவேல், முனியராஜ், சுந்தர், கே.சரவணன், வி.ஆத்திமுத்து, டி.ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai