Enable Javscript for better performance
உலக மன நல நாள் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உலக மன நல நாளையொட்டி, பள்ளி மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வுப் பேரணி கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு டி.எஸ்.பி. முருகவேல் தலைமை வகித்தார். பேரணியை கோட்டாட்சியர் கண்ணபிரான் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
    இப்பேரணி எட்டயபுரம் சாலை, புதுசாலை வழியாக அரசு அலுவலக வளாகத்தில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகம் முன் நிறைவடைந்தது.
    பேரணியில், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர், மாணவிகள், தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
    மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கச் செயலர் விஜயன், ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் சண்முகக்கனி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளையின் பொருளாளர் முகேஷ் ஜெயின், மகளிர் மன்றச் செயலர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை உறுப்பினர் அய்யப்பசாமி, ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    அறக்கட்டளைத் தலைவர் தேன்ராஜா வரவேற்றார். பொறுப்பாளர் சேர்மராஜ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai