Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல் கோவில்பட்டி நகராட்சி வார்டுகளை சுழற்சி முறையில் மாற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல் கோவில்பட்டி நகராட்சி வார்டுகளை சுழற்சி முறையில் மாற்றக் கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளையும் சீரமைத்து, சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    இதுகுறித்து கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகராஜ், நகராட்சி ஆணையர் சர்தாரிடம் அளித்த மனு:
    கோவில்பட்டி நகராட்சியில் பல வார்டுகள் சுழற்சி முறையில் பிரிக்கப்படவில்லை. பொது வார்டுகள் தொடர்ந்து சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாகவும், தாழ்த்தப்பட்டோருக்கு என ஒதுக்கப்பட்ட வார்டுகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் நீடித்து வருகின்றன. பொது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டுகளும் இதுவரை மாற்றப்படவில்லை.
    இந்நிலையில், கடந்த நகராட்சி கூட்டத்தில் 3, 19, 22, 23, 24 ஆகிய வார்டுகள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டன. ஒரே பகுதியில் 22, 23, 24 ஆகிய வார்டுகள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால் கடந்த முறை பொது மற்றும் பொது பெண்கள் என இருந்த வார்டுகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது குறித்து மக்களுக்கு புரியவில்லை.
    ஒரு வார்டுக்கு 2 ஆயிரம் வாக்குகள் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 3,000-4,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.இதனால் கால விரயமும், வீண் செலவுகளும் ஏற்படுகின்றன.
    கூடுதல் வருமானம், கூடுதல் வாக்காளர்கள் எண்ணிக்கை கொண்ட கோவில்பட்டி நகராட்சியில், வாக்காளர்களின் எண்ணிக்கையை சரி செய்து வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி, பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்கு அதிக உறுப்பினர்களை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்.
    சுழற்சி முறையையும், பொது, பொது பெண்கள், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பெண்கள் வார்டு என்ற ஒதுக்கீட்டையும் முறைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai