Enable Javscript for better performance
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும், குறைந்தபட்ச போனஸ் ரூ. 4 ஆயிரத்தையும் உடனடியாக வழங்கவேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். சென்னை தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வந்த 11 பேரின் பணி நீக்கத்தைக் கண்டித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளைத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க கிளைத் தலைவர் ஆறுமுகம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கப் பொருளாளர் திருவட்டப்போத்தி, மாவட்டப் பொருளாளர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கிளைச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். இதில், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க உதவித் தலைவர் மீனாட்சிசுந்தரம், ஒப்பந்த ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பாலசிங், தங்கதுரை, கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai