Enable Javscript for better performance
தூத்துக்குடியில் இன்று ஆன்மிக விநாடி-வினா போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான ஆன்மிக விநாடி-வினா போட்டி சனிக்கிழமை (அக். 8) நடைபெறுகிறது.
    இதுகுறித்து தூத்துக்குடி நாமத்வார் பிரார்த்தனை மைய நிர்வாகி நேருபிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
    தூத்துக்குடியில் நாமத்வார் பிரார்த்தனை மையம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான புராநவா எனப்படும் ஆன்மிக விநாடி- வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    நிகழாண்டுக்கான முதல்சுற்று போட்டியில் 10 மாவட்டங்களிலிருந்து 270 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். இதில் 80 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    இதையடுத்து, இறுதிப் போட்டி தூத்துக்குடி அபிராமி மஹாலில் சனிக்கிழமை (அக். 8) நடைபெறுகிறது. போட்டியில் வெற்றிபெறும் மாணவர், மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai