Enable Javscript for better performance
தூத்துக்குடியில் போதகர் மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மதபோதகரின் உடல் வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
    தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (73). இவர், மாரடைப்பால் இறந்ததாகக் கூறி, அவரது உடலை சபை நிர்வாகிகள் வியாழக்கிழமை அடக்கம் செய்ய முயன்றனர்.
    ஆனால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் கூறி, கனகராஜின் உறவினரான சென்னையைச் சேர்ந்த சுதர்சன், சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, கனகராஜின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு, அவரது சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
    இதுதொடர்பாக, கனகராஜ் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்திருக்கலாம் என்ற அடிப்படையில் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கனகராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட விசாரணையில் ஈடுபட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai