Enable Javscript for better performance
"நாகலாபுரம் அரசு ஐ.டி.ஐ.யில் பகுதிநேர தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "நாகலாபுரம் அரசு ஐ.டி.ஐ.யில் பகுதிநேர தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'

    By DIN  |   Published on : 08th October 2016 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகலாபுரம் அரசு ஐ.டி.ஐ.யில் அக். 13 ஆம் தேதி தொடங்கும் பகுதிநேர தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், நாகலாபுரத்தில் உள்ள உமறுபுலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பகுதிநேர இலவச பயிற்சி வகுப்புகள் அக். 13 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
    இதில், ஆர்க் மற்றும் கேஸ் வெல்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர், தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களை பெற்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
    கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் ஆகும். தினமும் பயணப்படியாக ரூ.100 வீதம் பயிற்சியின் முடிவில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04638-242687 என்ற தொலைபேசி எண்ணிலும், 94423 23986 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai