Enable Javscript for better performance
விநாடி-வினா போட்டி: காமாட்சி வித்யாலயம் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில், காமாட்சி வித்யாலயம் பள்ளி முதலிடத்தைப் பிடித்தது.
    தூத்துக்குடி வஉசி கல்லூரியில், கணிதத் துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த 13 மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
    இறுதிப் போட்டியில் காமாட்சி வித்யாலயம் பள்ளி மாணவர்கள் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளி 86 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், ஏபிசி வீரபாகு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 36 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
    தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை வகித்தார். கனரா வங்கி சிதம்பரநகர் கிளை மேலாளர் சத்யன் முன்னிலை வகித்தார்.
    கனரா வங்கியின் துணை பொதுமேலாளர் கே. மகேந்திரன், இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர். பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
    நிகழ்ச்சியில், கல்லூரியின் கணிதத் துறைத் தலைவர் ஏ. நெல்லை முருகன், பேராசிரியர் அண்டனி ரெக்ஸ் ரொட்ரிகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai