Enable Javscript for better performance
அக். 17, 18இல் விவசாய சங்கங்கள் ரயில் மறியல்: மக்கள் நல கூட்டியக்கம் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    அக். 17, 18இல் விவசாய சங்கங்கள் ரயில் மறியல்: மக்கள் நல கூட்டியக்கம் ஆதரவு

    By DIN  |   Published on : 15th October 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாய சங்கங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் அக். 17 ஆம் தேதியும், கோவில்பட்டியில் அக். 18 ஆம் தேதியும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என மக்கள் நலக் கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.
    இது தொடர்பாக தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார்.
     கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன், மதிமுக இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     கூட்டத்தின்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தும் தொடர் ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.  மேலும், மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் அக். 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ரயிலை மறிப்பது என்றும், மறுநாள் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
    இப்போராட்டங்களில் மாவட்டச் செயலர்கள் தலைமை ஏற்பது என்றும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், மக்கள் நல கூட்டியக்கத்தினரும் திரளாக கலந்து கொள்ளச்செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai