Enable Javscript for better performance
அரசு இ-சேவை மையங்களில் ரூ. 25-க்கு வண்ண வாக்காளர் அட்டை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ரூ. 25 செலுத்தி வாக்காளர் வண்ண அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம், அனைத்து மண்டல, பகுதி மற்றும் கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    இதில், முதல்கட்டமாக தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என 302 அரசு இ-சேவை மையங்களில் ரூ. 25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai