Enable Javscript for better performance
ஆத்தூரில் இரு தரப்பினர் மோதல்: 6 பேர் காயம்;10 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூரில் இரு தரப்பினர் மோதல்: 6 பேர் காயம்;10 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 15th October 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூர் அருகே கொழுவைநல்லூரில் வீடு காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் காயமடைந்தனர்.
    கொழுவைநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்நந்த சண்முகவேல் மகன் சிவனணைந்தபெருமாள் (55). இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் வேலுவின் மருமகனான கோபால், சிவனணைந்த பெருமாளிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறினாராம்.
    இதில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் சிவனணைந்தபெருமாள், அவரது தம்பி முருகன் (53), மகன் ஐகோர்ட் துரை(34), அழகுமுத்து மகனான ராமஜெயம் (52) ஆகியோர் காயமடைந்தனர்.
    இதுபோல் எதிர்தரப்பில் லெட்சுமணன் மனைவி சண்முகத்தாய் (32),இசக்கிப்பாண்டி மகள் சிந்தாமணி (8) ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இது தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai