Enable Javscript for better performance
இலுப்பையூரணி சிந்தாமணி நகரில் ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    இலுப்பையூரணி சிந்தாமணி நகரில் ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு

    By DIN  |   Published on : 15th October 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட சிந்தாமணி நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் ராமகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் திரவியத்திடம் அளித்துள்ள மனு: சிந்தாமணி நகர், செண்பகா நகர் பகுதிகளில் 2,000 குடும்பங்கள் உள்ளன. இதில், 1,050 குடும்ப அட்டைகள் உள்ளன. இப்பகுதி மக்கள் கூலி வேலை செய்துவருகின்றனர்.  
    இவர்கள் பொது விநியோகத் திட்ட பொருள்கள் வாங்க புதுக்கிராமம், வேலாயுதபுரம், பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.புதுக்கிராமம் நியாயவிலைக் கடையில் 700 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ளது. இக்கடையில் பொருள்களைப் பெற சிந்தாமணி நகர், செண்பகா நகர் பகுதி மக்கள் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தகராறும் ஏற்படுகிறது.
    எனவே, காலவிரயம், பணவிரயம், மனஉளைச்சல் ஆகியவற்றைத் தடுக்க குடும்ப அட்டைகளைப் பிரித்து, சிந்தாமணி நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்றனர் அவர்கள். மனுவில், நியாயவிலைக் கடைக்கான வாடகைக் கட்டடம், தராசு உள்ளிட்ட செலவுகளை தாங்களே ஏற்பதாகக் கூறி, உறுதிமொழிப் பத்திரத்தையும் இணைத்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai