Enable Javscript for better performance
கோவில்பட்டியில் அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, காலக்கெடு முடிந்த விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் உத்தரவின்படி, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் சர்தார் மேற்பார்வையில், நகரமைப்பு அலுவலர் காஜா முகைதீன் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வேலாயுதபுரம் பகுதியிலிருந்து இப்பணியை ஊழியர்கள் தொடங்கினர். தொடர்ந்து, ரயில் நிலையம் பகுதி, புதுரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.
    மேலும், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், அரசு சுவர்களில் சட்ட விரோதமாக எழுதும் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என நகரமைப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai