Enable Javscript for better performance
கோவில்பட்டி செல்வ மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத்தின் 19ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தின் கிளை பங்கான இவ்வாலயத் திருவிழாவை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு நவநாள் ஜெபம் தொடங்கியது.
    திருவிழா கொடியை சாந்தி நகர் குழந்தை ஏசு திருத்தல பங்குத்தந்தை விஸ்வாச ஆரோக்கியராஜ் ஏற்றிவைத்தார். வல்லம் அதிதூதர் ரபேல் ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியராஜ், கோவில்பட்டி புனித வளனார் ஆலய பங்குத்தந்தை பீட்டர், உதவி பங்குத்தந்தை சேவியர்ராஜ் ஆகியோர் இணைந்து, "இரக்கத்தை கருத்தாங்கியவள் அன்னை மரியாள்' என்ற தலைப்பில் மறையுரையாற்றி திருப்பலி நிறைவேற்றினர்.
    2ஆவது நாளான சனிக்கிழமை (அக்.15) மாலை 6.30 மணிக்கு நவநாள் ஜெபமும், அதைத் தொடர்ந்து உடையார்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை ஜோமிக்ஸ் "இரக்கத்தின் ஊற்று அன்னை மரியாள்' எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
    ஞாயிற்றுக்கிழமை (அக்.16) மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபமும், அதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில், அருள்தந்தையர் சேரன்மாதேவி விக்டர்ராஜ், திருச்சி கமில்லஸ் திருச்சபை பேசில், பூவிருந்தாளி அமலமேரி தியாகிகள் சபை அந்தோணிராஜ், இளையரசனேந்தல் வினோத்பால்ராஜ், வெங்கடாசலபுரம்  வில்சன் உள்ளிட்டோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகின்றனர். அதைத் தொடர்ந்து நற்கருணை ஆசிர் நடைபெறும். பின், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பரிசுத்த செல்வ மாதா சொரூபத்துடன் சப்பர பவனி நடைபெறும். திருவுருவ பவனி ஆலயம் வந்தடைந்தவுடன் கொடி இறக்கம் நடைபெற்று, விழா நிறைவுறும். தொடர்ந்து அசன விருந்து வழங்கப்படும்.
    ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையர், அமலன்னை அருள்சகோதரிகள், பங்குப் பேரவையினர், புதுக்கிராமம் பகுதி இறைமக்கள், அன்பியத்தினர் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai