Enable Javscript for better performance
சாத்தான்குளம் அருகே அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

    By DIN  |   Published on : 15th October 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோயிலில் தசரா விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை மற்றும் சப்பர பவனி நடைபெற்றது.
    இக்கோயிலில் நவராத்திரி மற்றும் தசரா விழா 10 நாள்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் கோயிலில் சிறப்பு பூஜை, அம்பாள் நவராத்திரி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. 9ஆம் நாளில் 108 திருவிளக்கு பூஜையும், 10ஆம் நாளில் ஸ்ரீகணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அம்பாள் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் அர்ச்சகர் நயினார்செல்லப்பா பூஜைகளை நடத்தினார். இதேபோல் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai