Enable Javscript for better performance
சுமை ஆட்டோ-கார் மோதல்: மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சுமை ஆட்டோவும், காரும் மோதிக்கொண்டதில், பள்ளி மாணவர் இறந்தார்.
    திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியப்பன் மகன் கலஞ்சர்(33). இவர், ஒட்டன்சத்திரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு காய்கறிகளை ஏற்றிச்சென்றாராம்.
    கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் அருகே சென்றபோது, கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு எதிர்திசையில் வந்த சுமை ஆட்டோ மீது மோதியதாம்.
    இதில், காரில் இருந்த நாகர்கோவில் தங்கப்பாண்டியன் மகனான பிளஸ் 2  மாணவர் பிரதி வீந்தன்(18) பலத்த காயமடைந்து அதே இடத்தில் இறந்தார். கார் ஓட்டுநர் கன்னியாகுமரி வடக்கு குண்டல் மாரியா காட்டேஜைச் சேர்ந்த அ.திருனோசெடின்(28) லேசான காயத்துடன் தப்பினார்.  
    தகவலறிந்த நாலாட்டின்புத்தூர் போலீஸார், மாணவரின் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.  மேலும், காயமடைந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் கலஞ்சர், கிளீனர் ஸ்டாலின்(42) ஆகியோரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து திருனோசெடினை கைது செய்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai