Enable Javscript for better performance
செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாளை ஐப்பசித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாளை ஐப்பசித் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக்.16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    இவ்விழாவையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.  காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகின்றன. இம்மாதம் 27ம் தேதி வரை இந்த விழா நடைபெறும். விழா நாள்களில் பல்வேறு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். அக். 24ஆம் தேதி வணிக வைசிய சங்கம் சார்பில் காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
    அக். 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, கோயில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai