Enable Javscript for better performance
திருச்செந்தூர் அருகே தசரா குழுவினர் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணத்தில் தசரா குழுவினர் மோதிக்கொண்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
    வல்லநாடு முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் திரவியம் (28). இவர் வீரபாண்டியன்பட்டணம் கிங் காலனியில் வசித்தபோது, தசரா செட் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் தசரா விழா கணக்கு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திரவியம் வல்லநாட்டில் குடியேறி விட்டார்.
    இந்நிலையில் அண்மையில் தசரா விழாவுக்காக, திரவியம்  வேடமணிந்து தனது குழுவினருடன் காணிக்கை வசூல் செய்வதற்காக வீரபாண்டியன்பட்டணம் கிங் காலனிக்கு வந்தார். அப்போது அவருக்கும், கிங் காலனியைச் சேர்ந்த குமாருக்குமிடையே தசரா விழா வசூல் கணக்கு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம்.
    இதில் திரவியத்தை குமார், அவரது மகன் இசக்கிபாண்டி, திருவடி, கார்த்திக், மாயாண்டி ஆகிய 5 பேரும் சேர்ந்து தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai