Enable Javscript for better performance
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: குடியிருப்புகளை அகற்ற எம்.எல்.ஏ. எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: குடியிருப்புகளை அகற்ற எம்.எல்.ஏ. எதிர்ப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி புறவழிச்சாலையில் நீர்வழி போக்குவரத்தில் இருந்த 8 ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினர். அப்போது, குடியிருப்புகளை அகற்ற சட்டப்பேரவை உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
     தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையின் புறவழிச்சாலை சந்திப்பில், மாநகராட்சிக்கு சொந்தமான நீர்வழி போக்குவரத்துப் பகுதியில் இருந்த காலியிடங்களை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்து இருப்பதாகவும், குடியிருப்புகள் அமைத்து வசித்து வருவதாகவும் புகார் எழுந்தது.
     இதையெடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணியில் தூத்துக்குடி வட்டாட்சியர் சங்கரநாராயணன், மண்டல துணை வட்டாட்சியர் ஞானராஜ், மாநகராட்சி உதவி ஆணையர் காந்திமதி தலைமையிலான பணியாளர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
    பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள் அங்கிருந்த 8 கடைகளை இடித்து அகற்றினர். இதையடுத்து,  அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்புகளையும் அகற்ற அதிகாரிகள் முயன்றனர். அப்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன், குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    முன்னறிவிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சரியானதல்ல என்றும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுஇடம் வழங்கிய பின்னர் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதையடுத்து, முறையான நோட்டீஸ் வழங்கியபிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai