Enable Javscript for better performance
"தூத்துக்குடியில் வியாபாரிகளுக்கு பாதிப்பின்றி போக்குவரத்தில் மாற்றம்'- Dinamani

சுடச்சுட

    

    "தூத்துக்குடியில் வியாபாரிகளுக்கு பாதிப்பின்றி போக்குவரத்தில் மாற்றம்'

    By DIN  |   Published on : 15th October 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகரில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்றார் மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்.
     இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஜெயராஜ் சாலை வியாபாரிகளிடம் அவர் மேலும் கூறியதாவது:
    தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஜெயராஜ் சாலையில் காய்கனி சந்தைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் சந்தைக்கு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் சுற்றுச்சுவர் அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    அங்குள்ள தனியார் வேன் நிறுத்தும் இடத்துக்கு வேறு இடம் ஒதுக்கி தரப்படும். சிற்றுந்துக்கு என தனி இடம் அமைத்து அங்கு மட்டுமே சிற்றுந்து நிற்க ஏற்பாடு செய்யப்படும். தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
     "நோ பார்க்கிங்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாகனத்தை நிறுத்தினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். வியாபாரிகள் தங்கள் எல்லையை தாண்டி கடைக்கு முன்பாக நடைபாதையில் பொருள்களை வைக்கக் கூடாது. வியாபாரிகள் தங்கள் நலனுக்காக கூட்டாக சேர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai