Enable Javscript for better performance
தூத்துக்குடி அருகே விவசாயி கொலை: மகனிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (52). விவசாயி. இவர் தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது அவரது இளைய மகன் இசக்கிமுத்து தகராறு செய்தாராம். அப்போது அரிவாளால் வெட்டப்பட்ட சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட இசக்கிமுத்துவை சுடலைமுத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தனது தந்தையை  வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்றகோணத்தில் இசக்கிமுத்துவிடம் புதுக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai