கோவில்பட்டியில் விவசாயிகளுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் அனிதா முகாமை தொடங்கிவைத்தார்.
பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) தெய்வநாயகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர் பாஸ்கரன், உதவிப் பேராசிரியர் சுதாகரன், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சங்கரநாராயணன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சமுத்திரப்பாண்டியன் (கோவில்பட்டி), முருகப்பன் (புதூர்), கால்நடை உதவி மருத்துவர் கண்ணபிரான், வேளாண்மை விற்பனை துறையைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் பேசினர்.
முகாமில், கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த மானாவாரி விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி இயக்குநர் (ஓட்டப்பிடாரம்) மோகன்ராஜ் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் அனி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.