உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஒ.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், உறுப்பினர்களாக எஸ்.பால்கரன், அ.ஞானேந்திர பிரகாஷ், செ.ராமகிருஷ்ணன், சி.செந்தில்குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி இரா.ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் பகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.