தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் மாவட்டத்தில் 9 இடங்களில் வட்டாட்டசியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது. அதன்படி, தூத்துக்குடி வட்டம் முள்ளக்காடு பகுதி-1, ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து, திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டினம், சாத்தான்குளம் வட்டம் திருப்பணிபுத்தன்தருவை, கோவில்பட்டி வட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டம் அருங்குளம், எட்டயபுரம் வட்டம் ராமனூத்து, ஓட்டப்பிடாரம் வட்டம் மலைப்பட்டி, கயத்தாறு வட்டம் கயத்தாறு ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
இம்முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.