கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் புதன்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் கட்டடத்தின் மேற்கூரை மற்றும் தீப்பெட்டித் தயாரிக்கப் பயன்படும் இயந்திரம் ஆகியவை சேதமடைந்தன.
கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் சுகுமார். இவருக்கு ஜோதி நகரில் சொந்தமாக கட்டடம் உள்ளது. அந்த கட்டடத்தை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பீர்பாட்ஷா மகன் சுல்தான்பாட்ஷா (32) என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு தீக்குச்சிகளை தீப்பெட்டிகளில் அடைத்து பண்டல் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
அந்த இயந்திரத்தின் மூலம் தீக்குச்சிகளை பண்டல்கள் போடும் சோதனை ஓட்டப் பணியில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மஸ்தான் மகன் அலிபாபு (41) ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ முழுவதுமாக பரவியது. இதனால் கட்டடத்தின் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் வெடித்துச் சிதறியது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வீரலட்சுமணன் தலைமையில், தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும், கட்டடத்தின் மேற்கூரை மற்றும் இயந்திரத்தின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி நாசமாயின. சம்பவ இடத்தை தொழிற்சாலை உதவி ஆய்வாளர் தீபா,சுடலை செல்வம், வருவாய் ஆய்வாளர் அப்பனராஜ்,கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.