ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஆலந்தா கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் அருள் பயஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமுக்கு முன்னோடியாக மனுக்கள் பெற, ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஆலந்தா கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 10 மணிக்கு மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.