அதிதூதர் மிக்கேல் திருத்தல திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டியையடுத்த வெங்கடாசலபுரம் அதிதூதர் மிக்கேல் திருத்தலத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on
Updated on
1 min read

கோவில்பட்டியையடுத்த வெங்கடாசலபுரம் அதிதூதர் மிக்கேல் திருத்தலத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை இல்லத்திலிருந்து பவனியாக ஆலயக் கொடிகள் அணிவகுப்பாக  கொண்டுவரப்பட்டன. பின்னர், திருநெல்வேலி சரணாலயம் இயக்குநர் ஜெயபாலன் கொடியேற்றினார். உலக சமாதானம் நிலவ வேண்டி வெண்புறா பறக்கவிடப்பட்டது.
தொடர்ந்து, ஜெயபாலன் தலைமையில், பாளை. மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் வியாகப்பராஜ், பங்குத்தந்தை வினோத், அருள்பிரகாசம், சவரிமுத்து, வெங்கடாசலபுரம் ஆலய பங்குத்தந்தை வில்சன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
24ஆம் தேதி இரவு 7 மணிக்கு புதுநன்மை விழா நடைபெறுகிறது. 25ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரடித் திருப்பலி, தேர்பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வில்சன் மற்றும் அருள்சகோரிகள், இறைமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com