மழை வேண்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை யாக பூஜை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு கணபதி பூஜையைத் தொடர்ந்து, சுவாமி சன்னதி முன் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அதிமுக மாவட்டச் செயலர் சி.த.செல்லப்பாண்டியன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவபெருமாள், கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், ராமர், ஆ.கணேசன், ராமச்சந்திரன், எல்.எஸ்.பாபு, பழனிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.