தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1426ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்த நிகழ்ச்சி (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தியில் விவசாயிகள் உள்பட அனைவரும் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கலாம்.மேலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் ஆட்சியர் அலுவலகத்தில் மே மாதம் நடைபெற வேண்டிய விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.