Enable Javscript for better performance
உழவர் உழைப்பாளர் கட்சி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், "அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; கடந்த இரு நிதியாண்டுகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்; விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 20ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம் என மாநிலத் தலைவர் தெரிவித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai