Enable Javscript for better performance
கபடி போட்டி: வள்ளியூர் அணிக்கு முதல் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியில்  வள்ளியூர் சண்முகபுரம் அணி முதல் பரிசு பெற்றது.  
    பழனியப்பபுரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு  மெமோரியல் அணி சார்பில் 26ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
    தொழிலதிபர் அசோக்குமார் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில், பழனியப்பபுரம்,மீரான்குளம், மருதகுளம்,மெஞ்ஞானபுரம்,கண்டித்தான்குளம்,வள்ளியூர் சண்முகாபுரம், கேரளா லியோ அணி,சுப்பிரமணியபுரம்,புதுக்குளம்,செம்பொன்குடியிருப்பு,பரப்பாடி,புளியங்குளம், சின்னமாடன்குடியிருப்பு,கோவை கிக்பாய்ஸ்,பேய்க்குளம் மலர்அணி,ஆவாரந்தலை அணி உள்ளிட்ட 16அணிகள் கலந்துகொண்டன. நடுவராக முருகன் செயல்பட்டார்.
    இறுதிப் போட்டியில் வள்ளியூர் சண்முகாபுரம் அணியும், மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணியும் மோதின. இதில் வள்ளியூர் சண்முகபுரம் அணி வென்று முதல்பரிசான ரூ.10ஆயிரம் மற்றும் கேடயமும், மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணி 2ஆம் பரிசாக ரூ7ஆயிரமும்,புதுக்குளம் அணி  3ஆம்பரிசாக ரூ5ஆயிரமும்,மருதகுளம் பிரின்ஸ் அணி 4ஆம் பரிசாக ரூ3ஆயிரமும் பெற்றது.
    கருங்கடல் முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கசெல்வி முன்னிலை வகித்தார். பொன்னரசு வரவேற்றார். இதில் ஊர் பிரமுகர்கள் கந்தசாமி, அப்பாத்துரை, ராமச்சந்திரன், மேபால்,ராமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஐகோர்ட்துரை நன்றி கூறினார்.  
    ஏற்பாடுகளை பழனியப்பபுரம் மெமோரியல் அணியினர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai