Enable Javscript for better performance
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை

    By DIN  |   Published on : 22nd October 2017 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்துதர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து காயல்பட்டினம் நடப்பது என்ன? குழுமம் சார்பில் சுகாதாரத் துறை செயலர் மற்றும் மருத்துவத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:
    காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் குடிநீர் வசதி இல்லை. மின்விளக்குகள் பல நாள்களாக செயல்படாமல் உள்ளது. ஊழியர்கள்,  நோயாளிகள்  மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. போதிய அளவில்,  துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லை. இத்தகைய குறைகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    மேலும்,  காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை வட்ட தலைமை  மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கூடுதலாக மகப்பேறு மருத்துவர்,  அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர் நியமிக்கப்பட வேண்டும்.  தற்போது வாரத்துக்கு 3 நாள்கள் மட்டும் செயல்படும் பல் மருத்துவ சிகிச்சை,  நவீன உபகரணங்களுடன் வாரம் முழுவதும் செயல்பட வேண்டும். அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் அமல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai