Enable Javscript for better performance
கோவில்பட்டி, கடம்பூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி, கடம்பூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி அளிப்பு

    By DIN  |   Published on : 22nd October 2017 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி மற்றும் கடம்பூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தலைமை வகித்தார். கல்வி மாவட்ட அலுவலர் (பொ) சின்னராசு முன்னிலை வகித்தார்.
    தலைமையாசிரியை ஜெகஜோதி வரவேற்றார். நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்துகொண்டு, பள்ளியில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 57 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.
    கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கோட்டாட்சியர் அனிதா தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சின்னராசு முன்னிலை வகித்தார்.
    பள்ளியில் 2016-17ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்,  மாணவிகள் 190 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் வழங்கினார். பள்ளி நிறுவனர் எம்.ராமச்சந்திரன் வரவேற்றார். தலைமையாசிரியை சாந்தினி நன்றி கூறினார்.
    நிகழ்ச்சிகளில்,  பள்ளி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அதிமுக நிர்வாகிகள் விஜயபாண்டியன், அய்யாத்துரைப்பாண்டியன், ராமச்சந்திரன், பாலமுருகன், பழனிகுமார், அலங்காரப்பாண்டியன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai