Enable Javscript for better performance
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் கோவர்த்தன பூஜை- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவர்த்தன பூஜை நடைபெற்றது.
    கோவர்த்தன மலையாகிய கிருஷ்ணருக்கு மக்கள் பலவகையான இனிப்பு வகைகளை நெய்வேத்தியம் செய்து,  நெய் தீபம் ஏற்றி,  உலக நன்மைக்காக இந்த பூஜை நடைபெற்றது.
    இந்த பூஜை செய்வதன் மூலம் மாதம் மும்மாரி பெய்து, செல்வ செழிப்புடன் எல்லோரும் கிருஷ்ணரைப் போலவே அழகு, செல்வம்,  பலம், புகழ் உள்ளிட்ட பல்வேறு பேறுகளைப் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இந்த பூஜை 7 நாள்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், சிறுவர்,  சிறுமிகளின் கோலாட்டம்,  கிருஷ்ண கான சபை குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெறுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai