Enable Javscript for better performance
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 161 பேருக்கு சான்றிதழ் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 161 பேருக்கு சான்றிதழ் அளிப்பு

    By DIN  |   Published on : 22nd October 2017 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 161 பேருக்கு சனிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், தாமிர முத்துக்கள் எனும் திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது.
    இதில், எலக்ட்ரீசியன், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்,  டேலி,  தையல் பயிற்சி,  சோலார் டெக்னீசியன், வெல்டர், போர்க்லிஃப்ட் ஆபரேட்டர் ஆகிய ஆறு தொழிற் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,  நிறுவன திட்டப்பிரிவு பொது மேலாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து,  அரவிந்த் ஹீரோ நிறுவன நிர்வாக பங்குதாரர் சில்வியா ஆகியோர் பயிற்சி முடித்த 161 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai