தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு இலவசமாக திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு இலவசமாக பல்வேறுபட்ட திறன் வளர்ச்சி பயிற்சி மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வாகன பராமரிப்பு, எலக்ட்ரீசியன், டெக்னீசியன் வெல்டிங், பீல்டு டெக்னீசியன், டொமஸ்டிக், ஜூவல்லரி போன்ற 31 வகையான பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ அல்லது தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினையோ நேரில் அணுகி பயிற்சிக்கு விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும், HTTPS://WWW.TNSKILL.TN.GOV.IN என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.