உடன்குடி வீட்டு வசதி கடன் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவராக கோ.ராஜ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவருக்கான தேர்தலில் குலசேகரன்பட்டினம் சங்கரலிங்கம் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
நிர்வாகிகளாக எஸ்.தேவராஜ், எஸ்.ரகு, அ.திலகவதி, கே.ரகு, சோமசுந்தரம், எஸ்.பட்டுக்கனி, பே.சுரேஷ்ராம், எஸ்.ராமகனி, பி.மாடசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.