திருச்செந்தூர் வட்டார எறிபந்து போட்டியில், ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் வென்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
திருச்செந்தூர் வட்டார விளையாட்டுப் போட்டிகள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் எறிபந்து போட்டியில், ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள், திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை 15-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட எறிபந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் சிறப்பாக விளையாடிய மாணவிகள் ஐஸ்வர்யா, ரதிதேவி, பிரியங்கா, ஆப்லின் ராணி, வேதமாலிலினி, செகினா, தீபிகா முனீஸ்வரி, கீர்த்தீகா மற்றும் சுவீட்லின் ஆகியோரை பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் ஜே.எஸ். வெஸ்லி மங்களராஜ், டி.என்.எபனேசர் ஞானதுரை, முதல்வர் நியூலாதுரை, உதவிமுதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.