திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிறந்த தமிழ்ப் பற்றாளர். பல போராட்டங்களில் ஈடுபட்டு தன்னுடைய அயராத உழைப்பால் ஐந்து முறை முதல்வராகப் பணியாற்றியவர். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.