காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் அணி சார்பில் இரு தினங்கள் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் இரா.செ.வாசுகி தலைமை வகித்தார். சான்றுறுதி அலுவலரும் சமூக நல ஆர்வலருமான எஸ். கிரீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளுக்கு மனித உரிமை என்பது என்ன? அவற்றின் செயல்கள் மற்றும் பயன்பாடுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செ. செல்வசாந்தி மற்றும் த. கோகிலா ஜெனிபர் ஆகியோர் செய்திருந்தனர்.