கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நூலக வார விழா தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நூலகப் புத்தொளி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் எம்.இ. முத்தையா மகளிர் அரசினர் கலைக் கல்லூரி நூலகர் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். 2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி திறந்துவைத்து, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.