கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகளில் முன்னாள் தலைவரும், மதிமுக மாவட்டச் செயலருமான ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர்.
கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கி தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டுறவு சார்பதிவாளர்கள் முருகவேல், முருகன், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், பதிவான 2,313 வாக்குகளில் 200 வாக்குகள் செல்லாதவை.
திமுக அணி சார்பில் சின்னத்துரை தலைமையிலான 11 பேர், நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், மதிமுக மாவட்டச் செயலருமான ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் 11 பேர், சுயேச்சைகள் 3 பேர் என 25 பேர் போட்டியிட்டனர்.
இதில், ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையிலான 11 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற 11 பேருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்கினர்.